16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக வலையமைப்புகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டம் நவம்பர் 18 ஆம் திகதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தின் கடைசி இரண்டு அமர்வுகளில் மத்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese அறிவித்துள்ளார்.
12 மாதங்களுக்குப் பிறகு இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் உட்பட ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உறவினர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், அவர்களும் தன்னைப் போன்று இணையம் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்மார்ட்போன்கள், சமூக ஊடகங்கள் போன்ற தொழில்நுட்பத்தை இளைஞர் சமூகம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை உலகின் பல நாடுகள் கண்காணிக்க முற்படும் வேளையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மீம் நடைமுறை குறிப்பிடத்தக்கது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பின்னணியில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடக வலையமைப்புகளை வைத்திருக்கும் மெட்டாவின் பாதுகாப்புத் தலைவர் ஆன்டிகோன் டேவிஸ், நிறுவனம் அரசாங்கத்தின் முடிவை மதிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு சில கல்வியாளர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.