Breaking NewsA R ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து - அதிர்ச்சியில்...

A R ரஹ்மான் – சாய்ரா பானு விவாகரத்து – அதிர்ச்சியில் ரசிகர்கள்

-

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மானை அவரது மனைவி சாய்ரா பானு விவாகரத்து செய்வதாக சற்றுமுன் அறிவித்துள்ளார். அவரது இந்த சமூக வலைதளப் பதிவு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாய்ரா தரப்பிலிருந்து வழக்குரைஞர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாய்ரா தெரிவித்திருப்பதாவது, “எங்களுடைய உறவில் ஏற்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வ அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருவருக்குமிடையேயான காதலைக் கடந்தும், இருவருக்குமிடையே பிரிவும் விரிசலும் ஏற்பட்டுள்ளதாக” அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“மிகுந்த வேதனையுடன் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், சவாலான இந்த தருணத்தில், பொதுமக்கள் எங்களுடைய தனிப்பட்ட வாழ்கையை புரிந்துகொண்டு மதிப்பளிக்கவும்” என சாய்ரா பானு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்மூலம், ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதியின் கடந்த 29 ஆண்டுகால திருமண உறவு முறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானுவுக்கும் கடந்த 1995-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹீமா ஆகிய இரு மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

Latest news

காஸாவில் நிவாரணப் பொருட்கள் கடத்திய கும்பல்

காஸாவில் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த சுமார் 100 லொரிகளிலுள்ள நிவாரணப் பொருட்களை ஆயுதம் ஏந்திய கும்பல் கடத்தி சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பகுதியில்...

இந்த ஆண்டு கிறிஸ்மஸிற்கு பல செலவுகளை குறைக்கும் ஆஸ்திரேலியர்கள்

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட ஆஸ்திரேலியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உணவுக்கு குறைவான பணத்தையே செலவிடுவார்கள் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அன்பளிப்புச் செலவு...

ஆஸ்திரேலியாவில் வாடகை வீடுகள் காலியிடங்கள் பற்றி இன்று வெளியாகிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் வாடகை வீடுகள் காலியிடங்கள் குறித்த புதிய அறிக்கை இன்று வெளியாகியுள்ளது ஆஸ்திரேலியாவில் வாடகை சொத்து வைத்திருப்பவர்களுக்கு அடுத்த ஆண்டுஒரு நம்பிக்கைக்குரிய ஆண்டாக அமைகிறது . அதன்படி, ஒவ்வொரு...

ஆஸ்திரேலியாவுக்கு வரும் தொழிலாளர்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்பும் திறமையான தொழிலாளர்களுக்கு பல துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது. நடுத்தர மற்றும் நீண்ட கால மூலோபாய திறன்கள் பட்டியல்...

ஆஸ்திரேலியாவுக்கு வரும் தொழிலாளர்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்பும் திறமையான தொழிலாளர்களுக்கு பல துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது. நடுத்தர மற்றும் நீண்ட கால மூலோபாய திறன்கள் பட்டியல்...

விக்டோரியாவில் சுகாதார நிபுணர்களுக்கு எதிரான அதிகரித்து வரும் வன்முறை

விக்டோரியாவில் சுகாதாரத் துறையில் பணிபுரியும் 20,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கடந்த ஆண்டில் மட்டும் வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில...