வட்டி விகிதக் குறைப்புக்கு ஆஸ்திரேலியர்கள் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று ஆஸ்திரேலியாவின் 4 பெரிய வங்கிகள் இன்று அறிவித்துள்ளன.
அடுத்த ஆண்டு பெப்ரவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் இந்த வட்டி விகிதக் குறைப்பு நடைபெறும் என்று வெஸ்ட்பேக் வங்கியும் இன்று அறிக்கை வெளியிட்டது .
2025 ஆம் ஆண்டு முதல் வட்டி விகிதக் குறைப்பு தொடர்பாக உறுதியான ஒருமித்த கருத்து இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது ரிசர்வ் வங்கி கணிப்பது போல் பணவீக்கம் குறையவில்லை என்றால் வட்டி விகிதம் குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் காமன் வெல்த் வங்கி மற்றும் ANZ வங்கி ஆகியவை வங்கி வட்டி விகிதம் டிசம்பர் 2025 க்குள் 3.35 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளன.
மத்திய வங்கி இந்த ஆண்டு 6 மாதங்களுக்கு வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தது.
ரிசர்வ் வங்கி ஆளுநர்களின் இறுதிக் கூட்டம் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 10ஆம் திகதி நடைபெறும்.