Newsசீனாவின் 15 நாள் இலவச விசா கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா

சீனாவின் 15 நாள் இலவச விசா கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா

-

சீனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான 15 நாள் இலவச விசாக் கொள்கையில் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த முறைமையில் பல புதிய நாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நவம்பர் 8, 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரை, இந்த அமைப்பின் மூலம், ஆஸ்திரேலியர்கள் தங்கள் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் சீனாவுக்குச் செல்லலாம் மற்றும் 15 நாட்களுக்கு சீனாவில் தங்குவதற்கான வாய்ப்பைப் பெறலாம்.

கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்புவதும், நாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்டோரா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், மொனாக்கோ, நார்வே, ஸ்லோவாக்கியா மற்றும் தென் கொரியா ஆகியவை இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்ட புதிய நாடுகளாகும்.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் சீனா மீதான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் ஈர்ப்பை மீளப் பெறுவதுடன், இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளும் மீண்டும் வலுவடையும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

தனது 28 கிளைகள் மூடப்பட உள்ள ஆஸ்திரேலியாவின் பிரபலமான வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான Bendigo வங்கி, அதன் 28 கிளைகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட கிளை மாதிரி இனி பொருத்தமானதாக இல்லாததால்,...

தாய்லாந்தில் இறந்து கிடந்த 23 வயது ஆஸ்திரேலியர்

தாய்லாந்து ஹோட்டல் அறையில் வீடு திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளூர் செய்தி ஊடகமான 'Phuket News' படி,...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...

HESC கடன் நிவாரணம் குறித்து குரல் எழுப்பும் மாணவர்கள்

HECS கடன்களை 20 சதவீதம் குறைப்பதற்கான மசோதாவை தொழிலாளர் கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. கல்வி அமைச்சர் Jason Clare நேற்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் மூன்று...

71 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த WWE ஜாம்பவான்

உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மல்யுத்த வீரராகக் கருதப்பட்ட 71 வயதான Hulk Hogan வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தனது வர்த்தக முத்திரையான bandana, sunglasses...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...