குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனையானது குழந்தைகள் என்ன என்ன தங்கள் மூக்கில் நுழைத்துக்கொள்கின்றனர் என்பது தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்தியது.
கடந்த 10 ஆண்டுகளில், குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனை ஊழியர்கள், 1,650க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மூக்கில் இருந்து பல்வேறு பொருட்கள் சிக்கிய நிலையில் அதற்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனையின் கூற்றுப்படி, குழந்தைகள் மூக்கில் சிக்கிக்கொள்ளும் பொருட்களின் பட்டியலில் மணிகள் (Beads) முதலிடத்தில் உள்ளன.
Lego, சிறிய உருண்டையான பொருட்கள், விதைகள் (Seeds) மற்றும் கொட்டைகள் (Nuts) போன்றவையும் குழந்தைகளுக்கு மூக்கில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
இந்த பட்டியலில் சிறிய பொம்மைகள் (Toys), பொத்தான்கள் மற்றும் கிரேயன்களும் (Crayons) உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு குழந்தைகளின் நாசியில் சிக்கிக் கொள்ளும் பொருட்களில் காந்தங்களும் (Magnets) பேட்டரிகளும் உள்ளதாக குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனை மேலும் கூறியுள்ளது.