Newsவெப்ப அலை எச்சரிக்கை - இரண்டு மாகாணங்கள் மொத்தமாக இருளில் மூழ்கும்...

வெப்ப அலை எச்சரிக்கை – இரண்டு மாகாணங்கள் மொத்தமாக இருளில் மூழ்கும் அபாயம்

-

அவுஸ்திரேலியாவில் இந்த பருவத்தின் முதல் வெப்ப அலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்கள் இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

நிலக்கரியில் இயங்கும் பெரிய மின் நிலையங்களில் ஏற்படும் மின் தடைகளும் வெப்ப அலைகளுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சிட்னியின் சில பகுதிகள் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் 40Cயை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி வாரம் முழுவதும் வெப்பநிலை 30C என தொடரும் என்றே கூறப்படுகிறது. அத்துடன் நியூ சவுத் வேல்ஸ் கிழக்குப் பகுதிகளில் வெப்ப அலை குறைந்த அளவு முதல் கடுமையான தீவிர நிலை வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை பிற்பகல் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மின்சார விநியோகம் எதிர்பார்த்த நிலையில் இருக்காது என்றே Aemo அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 3 மணி முதல் இரவு 10.30 வரையில் மின்சாரம் தடைபடும் நிலை இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி, திட்டமிடப்பட்ட மற்றும் திட்டமிடப்படாத பராமரிப்பு காரணமாக கிட்டத்தட்ட ஆறு ஜிகாவாட் நிலக்கரி எரியும் மின் நிலையங்கள் இயங்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...