ஆஸ்திரேலியாவின் முதல் வெப்ப மண்டல சூறாவளி இந்த வாரம் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
இதன்படி, அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்பகுதியில் இந்த சூறாவளி நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் இது வெப்பமண்டல சூறாவளியாக மாறும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வெப்பமண்டல சூறாவளி சீசன் நவம்பர் தொடக்கத்தில் தொடங்கி ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில், வெப்பமண்டல சூறாவளிகள் 9 முதல் 11 வரை வளரும் என்று வானிலை அறிவிப்பின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-2025 ஆம் ஆண்டுக்கான முதல் சூறாவளிக்கு ராபின் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த சூறாவளி ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கணிக்கப்பட்டுள்ளதுடன் Cocos (Keeling) தீவுகள் பகுதியை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் முழுவதும் தீவு முழுவதும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.