Newsசிரியாவில் வெடித்துள்ள உள்நாட்டு போர் - கைப்பற்றப்பட்ட அலெப்போ நகர்

சிரியாவில் வெடித்துள்ள உள்நாட்டு போர் – கைப்பற்றப்பட்ட அலெப்போ நகர்

-

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியா ஜனாதிபதியாக பஷர் அல் அசாத் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் ஜனாதிபதி பஷர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது.

2012 ஆம் ஆண்டுமுதல் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு அலெப்போ நகரை ரஷ்யா தனது விமானப்படை மூலம் மீட்டு 2016 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்திடம் மீண்டும் ஒப்படைத்தது. அதன் பிறகான காலத்தில் சிறிய அளவிலான எதிர்ப்பு அங்கங்கே போராட்டங்கள் என்ற அளவில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மீண்டும் உள்நாட்டுப் போராக இது மாறியுள்ளது.

முந்தைய போராட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்ட ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் திடீரென மீண்டும் இராணுவத்துடன் சண்டையைத் தொடங்கியுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபையால் பயங்கரவாத அமைப்பாக வரையறுக்கப்பட்ட இதன் தலைவராக அபு முகமது அல்-கோலானி உள்ளார். முந்திய காலங்களில் அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை இவ்வமைப்பு பேணி வந்துள்ளது

இந்நிலையில் தற்போது வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் டசன் கணக்கான படையினர் கொல்லப்பட்டதாக சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் அலெப்போ நகரில் இருந்து இராணுவம் தாற்காலிகமாக பின்வாங்கி உள்ளது.

மேலும் அலெப்போவில் மையம் கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் மீது இராணுவம் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் -இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ நகர் வரலாற்று காலம் தொட்டே சிரியாவில் முக்கிய நகரமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...