குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் தவறான திசையில் வாகனம் ஓட்டியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, கோல்ட் கோஸ்ட் M1 சாலையில் அதிவேகமாக எதிர்திசையில் ஓட்டியதற்காக சம்பந்தப்பட்ட சாரதி கைது செய்யப்பட்டார்.
000 அவசர இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளையடுத்து இந்த சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், வீதியில் செல்லும் ஏனைய சாரதிகளை துன்புறுத்துவதற்காகவே வேண்டுமென்றே இந்தச் செயலைச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் சுமார் 20 நிமிடங்கள் தவறான திசையில் பயணித்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுத்த குயின்ஸ்லாந்து பொலிசார் சாலைத் தடைகளைப் பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான ஓட்டுநரை கைது செய்தனர்.
40 வயதுடைய சந்தேகநபரான குறித்த சாரதி தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.