அவுஸ்திரேலியாவில் பண்டிகைக் காலத்திற்கான 3 முக்கிய விமான நிலையங்களில் விமானப் பயணச்சீட்டுக் கட்டணத்தின் விலை திருத்தங்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
“Travel Insurance” நிறுவனம் நடத்திய இந்த ஆய்வின் மூலம் மெல்பேர்ண், சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் விமான நிலையங்களின் விமான கட்டண விவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டிசம்பர் 3ம் திகதி முதல் டிசம்பர் 5ம் திகதி வரையிலும், டிசம்பர் 10ம் திகதி முதல் 13ம் திகதி வரையிலும் முக்கிய விமான நிலையங்களில் சாதாரண தொகையை விட குறைவாக விமான டிக்கெட் கட்டணத்தை வாங்கலாம்.
இந்த நாட்களில் மெல்பேர்ணில் இருந்து டார்வினுக்கு செல்லும் விமானங்களில் சுமார் 50 டாலர்களை சேமிக்க முடியும் என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் பிரிஸ்பேர்ணில் இருந்து பெர்த் செல்லும் விமானங்களில் $95ஐயும், சிட்னியில் இருந்து பிரிஸ்பேர்ண் செல்லும் விமானங்களில் $71ஐயும் சேமிக்க முடியும் என்று அது மேலும் கூறுகிறது.
கடந்த ஆண்டு, மலிவான விமான நேரங்கள் டிசம்பர் 11 முதல் 17 வரை இருந்தன. இந்த ஆண்டு, அந்த தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.