Woolworth பல்பொருள் அங்காடி சங்கிலியுடன் இணைக்கப்பட்ட விநியோக மையங்களின் ஊழியர்களால் 17 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தொழில் நடவடிக்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
சுமார் 1500 ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழில்சார் நடவடிக்கையின் மூலம் Woolworths பல்பொருள் அங்காடி சங்கிலியின் விநியோக செயல்முறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஊழியர்களின் பணி வேகம் தொடர்பாக Woolworths நிறுவனம் நடவடிக்கை எடுப்பதை நிறுத்துவதையும், ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது குறித்து அந்நிறுவனம் எடுத்துள்ள முடிவையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐக்கிய தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் (UWU) செயலாளர் Tim Kennedy, இது தொடர்பான விடயங்களில் நிறுவன அதிகாரிகள் முன்னரே உரிய கவனம் செலுத்தியிருந்தால், இரு தரப்பினரும் விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்பு இருந்திருக்கும் என வலியுறுத்தியுள்ளார்.
Woolworths பல்பொருள் அங்காடி சங்கிலி இந்த தொழில்முறை நடவடிக்கை காரணமாக குறைந்தது $50 மில்லியன் விற்பனையை இழந்ததாக கணக்கிட்டுள்ளது.