Newsஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை வாசகங்களை பொறிக்க ஸ்பெயின் அரசு முடிவு

ஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை வாசகங்களை பொறிக்க ஸ்பெயின் அரசு முடிவு

-

அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்பெயின் அரசு அதிரடி நடவடிக்கையெடுத்துள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் விற்கப்படும் செல்போன்களில் எச்சரிக்கை வாசகங்களை விரைவில் பார்க்கலாம். அதாவது, புகையிலை மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் எழுதப்பட்ட எச்சரிக்கைகள் போல.செல்போன்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அதில் எழுதப்பட்டிருக்கும்.

செல்போன் உபயோகிப்பதை ‘பொது சுகாதார தொற்றுநோய்’ எனக்குறிப்பிட்டுள்ள ஸ்பெயின் அரசு, நாட்டு மக்கள் அதிக நேரம் ஸ்மார்ட் தொலைபேசியை உபயோகிப்பதை தடுக்கும் நோக்கில் இந்த புதிய முன்னெடுப்பை எடுக்க உள்ளது.

இதில் மொபைல் போன்களின் தீய விளைவுகள் பற்றி இடம்பெறும். இதற்காக 250 பக்க அறிக்கை தயாரிக்க 50 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

13 வயது வரையிலான குழந்தைகளுக்கான டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த இந்தக் குழு அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு 3 வயது வரை டிஜிட்டல் சாதனம் கொடுக்கக்கூடாது. 6 வயது குழந்தைக்கு தேவைப்படும் போதெல்லாம் செல்போன் கொடுக்க வேண்டும்.

இது தவிர, 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இணையம் இல்லாத போன்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, குழந்தைகள் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவின் பிறப்பு விகிதங்கள் தொடர்ந்து சரிவதற்கான காரணங்கள்

ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகையைப் பராமரிக்க போதுமான குழந்தைகள் இல்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. 2006 மற்றும் 2021 க்கு இடையில் 50–54 வயதுடைய குழந்தை இல்லாத பெண்களின்...

புதுமை பெறுகிறது விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் அதிகரித்து வரும் குற்ற விகிதத்தை எதிர்த்துப் போராட விக்டோரியா காவல்துறை புதிய திட்டங்களையும் நடவடிக்கைகளையும் முன்மொழிந்துள்ளது. விக்டோரியா காவல்துறை 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாற்றங்களைச்...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கார் திருட்டுகள் – கடுமையாகும் சட்டங்கள்

விக்டோரியாவில் கார் திருட்டு விகிதம் இந்த ஆண்டு 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. காப்பீட்டு முகவர்கள் ஒவ்வொரு 44 நிமிடங்களுக்கும் ஒரு கார் திருட்டு...

ஆன்லைனில் கசிந்த அல்பானீஸ், டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் தனிப்பட்ட தகவல்கள்

பிரதமர் அந்தோணி அல்பானீஸ், எதிர்க்கட்சித் தலைவர் சூசன் லே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. ஒரு...

மலேசியாவில் குழந்தைகள் மத்தியில் பரவும் நோய்

மலேசியாவில் வேகமாக பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா (influenza) தொற்றுநோய் காரணமாக 6000 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோயைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கடந்த வாரத்தில் 97...

விர்ஜின் ஆஸ்திரேலியா பயணிகளுக்கான புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய விமான நிறுவனமான விர்ஜின் ஆஸ்திரேலியா, பயணிகளுக்கான புதிய சாமான்கள் விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, Economy வகுப்பு பயணிகள் அதிக சாமான்களை எடுத்துச் செல்ல முடியும்,...