தனிப்பட்ட தகவல்களை வழங்காமல் தனி நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் புதிய முறை தொடர்பான பரிசோதனையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
அடையாள மோசடியை தடுக்க உருவாக்கப்பட்ட உலகின் முதல் திட்டம் இது என்று கூறப்படுகிறது.
2024ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 527 குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“Trust Exchange” எனப்படும் இந்த டிஜிட்டல் அடையாள அட்டை அமைப்பு பிரிஸ்பேர்ணில் உள்ள மருத்துவ மையத்தில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இதன் மூலம் ஆவணத் தேவைகள் மட்டுப்படுத்தப்படும் என ஊகிக்கப்படுகிறது.
இந்த அமைப்பின் மூலம், ஆஸ்திரேலியர்கள் myGov wallet உடன் இணைத்து, தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
தற்போது, இந்த முறை மருத்துவ சேவைகளை வழங்கும் தரப்பினருக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில் வங்கிகள், ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் ஹோட்டல்கள் இந்த அமைப்புடன் இணைக்கப்படும் என்று அரசாங்கம் நம்புவதாகவும் கூறப்படுகிறது.