மெல்பேர்ண் பிஷப் Mykola Bychok, கார்டினல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
நேற்று வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் புனித பாப்பரசர் ஃபான்சிஸ் அவர்களினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைனில் பிறந்த மைகோலா பைசோக் கடந்த ஆண்டு ஜார்ஜ் பெல் இறந்த பிறகு முதல் ஆஸ்திரேலிய கார்டினல் என்று கருதப்படுகிறார்.
44 வயதான பிஷப் பைசோக், போப் பிரான்சிஸால் பதவி உயர்வு பெற்ற 21 கர்தினால்களில் இளையவர்.
புதிய கார்டினல் பதவியின் மூலம் உக்ரைனில் நடந்து வரும் போர் குறித்து மக்களுக்கு அறிவூட்டுவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையில் போப்பிற்குப் பிறகு மிக மூத்த பதவி கார்டினல் ஆகும்.