உலகின் பழமையான காட்டுப் பறவையாகக் கருதப்படும் ‘Wisdom’ முட்டையிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவே விலங்கியல் வல்லுநர்களிடையே அதிக விவாதத்திற்கு காரணம், ஏனெனில் Wisdom-இன் வயது தோராயமாக 74 ஆண்டுகள் ஆகும்.
‘Wisdom’ என்ற புனைப்பெயர் கொண்ட இந்தப் பறவை Laysan albatross கடற்பறவை இனத்தைச் சேர்ந்தது.
அதன்படி, விஸ்டம் ‘கடல் பறவைகளின் ராணி’ என்று பிரபலமாக அறியப்படுகிறது.
நான்கு வருடங்களுக்குப் பிறகு விஸ்டம் ஒரு முட்டையை இட்டதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹவாய் தீவுக்கூட்டத்தின் வடக்கு முனையில் அமைந்துள்ள தீவு சரணாலயமான Midway Atoll National Wildlife Refuge இல் கடந்த வாரம் இந்த புதிய முட்டையுடன் குறித்த பறவை காணப்பட்டுள்ளது. மேலும் அதனுடன் ஒரு புதிய கூட்டாளியும் காணப்பட்டது.
பல தசாப்தங்களாக, விஸ்டமின் ஒரே துணையாக ‘Akeakamai’ என்ற பறவை இருந்தது. ஆனால், 2021க்குப் பிறகு இந்தப் பறவையைப் பார்க்க முடியவில்லை.
USFWS (US Fish and Wildlife Service) அறிக்கையின்படி, விஸ்டம் இதுவரை சுமார் 60 முட்டைகளை இட்டுள்ளது.
‘Laysan albatross’ இனத்தின் ஆயுட்காலம் 12 முதல் 40 ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்தப் பறவைகள் ‘வண்ண பிளாஸ்டிக்கை’ உட்கொண்ட உடனேயே இறந்துவிடுகின்றன.
இப்படிப்பட்ட சூழலில் நீண்ட காலம் உயிர்வாழ முடியும் என்பது ஆச்சரியம் என்கின்றனர் உயிரியலாளர்கள். மேலும் அவள் அதிக முட்டைகளை இடுவது ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1956 இல் விஸ்டம் ஐந்து வயதாக இருந்தபோது குறியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
‘Laysan albatross’ இனச்சேர்க்கை காலம் ஒக்டோபர் முதல் நவம்பர் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
-தொழிற்சாலை-