ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
பல பகுதிகளில் இன்று வெப்பநிலை 35 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அடிலெய்ட் மற்றும் மெல்பேர்ணில் வெப்பநிலை இந்த வார இறுதியில் 30 டிகிரி செல்சியஸை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திங்கட்கிழமை மெல்பேர்ணில் வெப்பநிலை சுமார் 41 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும், மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்பு கவனம் செலுத்துமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்களில் வெயிலில் படும் மக்கள் கவனமாக இருக்கவும் முடிந்தவரை தண்ணீர் அருந்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





