குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம் புதிய குற்றவியல் சட்டங்களை “Audult crime, adult time” மாநில பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
மாநிலப் பிரதமர் டேவிட் கிரிசாஃபுல்லி அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் இந்தப் புதிய சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
புதிய சட்டங்களின் ஊடாக குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Audult crime, adult time என அழைக்கப்படும் இந்த புதிய சட்டங்கள் 13 கடுமையான குற்றங்களுக்கு பொருந்தும் என்பதும் சிறப்பு.
கொலை, கொலை முயற்சி, கடுமையான தாக்குதல், வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளையடித்தல் போன்ற பாரிய குற்றங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டங்களின் கீழ் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளுக்கு வயது வந்த குற்றவாளிகளுக்கு இணையான தண்டனைகள் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.