மெல்பேர்ணின் மேற்கில் உள்ள தொழில்துறை பட்டறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலைமையைக் கட்டுப்படுத்த 50 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீயினால் குறித்த கட்டிடம் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.