2024ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு பொதுமக்களால் இணையத்தில் அதிகம் தேடப்பட்டவை குறித்த பட்டியலில் 10 இடங்களை கூகுள் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், நடப்பாண்டில் இந்திய அளவில் கூகுளில் தேடப்பட்ட பாடல்களின் பட்டியலின் முதல் 10 இடங்களில் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் ‘கட்சி சேர’ பாடல் 4-ஆம் இடத்தையும், ‘ஆச கூட’ பாடல் 9-ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.
உலக அளவில் கூகுளில் தேடப்பட்ட பாடல்களின் பட்டியலில் ‘கட்சி சேர’ பாடல் 10ஆம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ள 20 வயதான சாய் அபயங்கர் கட்சி சேர மற்றும் ஆசை கூட என இரண்டு ஆல்பம் பாடல்களை பாடி இணையத்தில் வெளியிட்டார். இந்த பாடல்கள் இணையதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் சூர்யா 45-ல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதிலாக இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இணைந்துள்ளார்.
முன்னதாக, ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தில் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இணைந்து பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.