உலகின் நிலையான பல்கலைக்கழகங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ஆஸ்திரேலியாவில் உள்ள 3 பல்கலைக்கழகங்கள் முதலிடம் பிடித்துள்ளன.
QS பல்கலைக்கழக மதிப்பீடுகளின்படி, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் அதற்கான ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதைக் கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள 1,800 பல்கலைகழகங்களை ஆய்வு செய்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் ஆய்வுகள் தொடர்பான பாடத்திட்டம் மற்றும் ஆராய்ச்சி முறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகம் உலகின் மிகவும் நிலையான பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது. மேலும் சுவிட்சர்லாந்தின் ETH சூரிச் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அந்த தரவரிசையில் மெல்பேர்ண் பல்கலைக்கழகம் 6வது இடத்தைப் பிடித்துள்ளது.
அதன்படி, உலகின் நிலையான பல்கலைக்கழகங்களில் சிட்னி பல்கலைக்கழகம் 7வது இடத்தையும், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் 8வது இடத்தையும் பெற்றுள்ளன.
உலகில் உள்ள 10 நிலையான பல்கலைக்கழகங்களில் அதிக எண்ணிக்கையிலான பல்கலைக்கழகங்களைக் கொண்ட நாடாக ஆஸ்திரேலியா பெயரிடப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும்.