விக்டோரியாவில் வசிப்பவர்கள் எதிர்வரும் நாட்களில் மிகவும் வெப்பமான காலநிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
நேற்று மாலை வரை, விக்டோரியா மாநிலத்தின் Mallee பகுதியில் உள்ள Walpeup-இல் வெப்பநிலை 47.1 டிகிரி செல்சியஸை எட்டியது. இது டிசம்பரில் பதிவான இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாக கருதப்படுகிறது.
மெல்பேர்ணின் CBD-லும் நேற்று மாலை வரை 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
Geelong மற்றும் Ballarat ஆகிய பகுதிகளில் நேற்று முறையே 42.3 டிகிரி செல்சியஸ் மற்றும் 40.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதுடன், இந்த காலகட்டத்தில் அந்த பகுதிகளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும் என்று கூறப்படுகிறது.
மெல்பேர்ண் West Gate பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக கடும் புகை மூட்டமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக போக்குவரத்து சாரதிகள் கவனமாக வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Gleanpark, Pootila, Dean Wattle Flat போன்றவற்றில் தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், Ballarat அருகே உள்ள Creswick குடியிருப்பாளர்களும் அப்பகுதியை காலி செய்யுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், Casterton-Edenhope சாலையில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக மேற்கு விம்மேரா பகுதியில் Chetwynd மற்றும் Power Creek பகுதியில் வசிப்பவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விக்டோரியா எமர்ஜென்சி சர்வீஸ் ஆப் (Vic Emergency App) மூலம் வழங்கப்படும் எச்சரிக்கைகளுக்கு கவனம் செலுத்துமாறு மாநில வாசிகளுக்கு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.