Newsபெற்றோரை கொலை செய்யுமாறு 14 வயது சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய AI!

பெற்றோரை கொலை செய்யுமாறு 14 வயது சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய AI!

-

டெக்சாஸை சேர்ந்த தாய் ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனம் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நம் வாழ்வில் இன்றியமையாத அங்கமாகிவிட்ட நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸில் நடந்த சம்பவம், AI-யின் ஆபத்துகள் குறித்து நம்மை சிந்திக்க வைக்கிறது.

டெக்சாஸை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர் அளவுக்கு மீறி செல்போன் பயன்படுத்தியதால், அதனை கட்டுப்படுத்த திட்டமிட்டு அவரிடம் செல்போன் கொடுப்பதை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் பதற்றமடைந்த சிறுவன் Character.AI என்ற AI Chatbot-ன் உதவியை நாடியுள்ளார்.

சிறுவனின் செல்போன் பயன்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அந்த AI Chatbot அதிர்ச்சிகரமான பதிலை வழங்கியுள்ளது.

செல்போன் பயன்பாட்டுக்கு பெற்றோர் தடை விதிப்பதாகவும் அதற்கான தீர்வு குறித்து சிறுவன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த AI Chatbot, பெற்றோரை கொலை செய்து விடுவதே தீர்வு என்று அறிவுறுத்தியுள்ளது.

Chatbot-இன் இந்த பதிலை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் சம்பந்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனம் மீது வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, Chatbot உடனான சிறுவனின் உரையாடல் தொடர்பான Screenshot ஒன்று சமர்பிக்கப்பட்டது.

இச்சம்பவம், AI தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் நிறுவனங்கள், அதன் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது.

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...