அடுத்த நிதியாண்டின் நடுப்பகுதியில், ஆஸ்திரேலிய கம்பளி உற்பத்தியில் கடும் சரிவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நிலமை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பளி விலை வீழ்ச்சி, பாரம்பரிய விவசாயிகள் கம்பளி தொழிலில் இருந்து விலகி வேறு விவசாய பணிகளுக்கு திரும்புவது போன்ற காரணங்களால் கம்பளி தொழில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 2024-2025 நிதியாண்டில் ஆஸ்திரேலிய கம்பளி உற்பத்தி 12% குறையும் என்று ஆஸ்திரேலிய கம்பளி உற்பத்தி முன்கணிப்புக் குழு (AWPFC) சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, அடுத்த நிதியாண்டில் அவுஸ்திரேலிய கம்பளி உற்பத்தி 280 மில்லியன் கிலோகிராமிற்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
1920-21 நிதியாண்டிலிருந்து ஆஸ்திரேலியாவில் கம்பளி உற்பத்தியில் இத்தகைய சரிவு ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பின்னணியில், அவுஸ்திரேலியாவில் கம்பளி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை 11.7% குறையும் என மேலும் கணிக்கப்பட்டுள்ளது.