விக்டோரியாவின் கிராமியன்ஸ் தேசியப் பூங்காவில் காட்டுத் தீ 24 மணி நேரத்தில் 500 முதல் 5400 ஹெக்டேர் வரை வேகமாகப் பரவியுள்ளது.
மின்னல் தாக்கம் மற்றும் வறண்ட காலநிலை காரணமாக காட்டுத் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருவதாகவும், தற்போதைய வானிலை காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் கூடுதல் சவால்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மிர்ரனத்வா, விக்டோரியா பள்ளத்தாக்கு, மற்றும் ஜிம்மி க்ரீக் மக்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்காக டன்கெல்டில் நிவாரண மையம் நிறுவப்பட்டுள்ளது.
தீ அபாயம் காரணமாக அப்பகுதியைச் சுற்றியுள்ள பல வீதிகளும் மூடப்பட்டுள்ளதுடன், மக்கள் அந்தப் பகுதிகளுக்கு வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மூடப்பட்டுள்ள சாலை!
- Grampians Road, is closed from Silverband Road to the southern Victoria Valley Road intersection.
- Victoria Valley Road is closed at the Victoria Point Intersection.
- Yarram Gap Road is closed from Grampians Road to Moyston-Dunkeld Road.