Cinemaநடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க தீர்மானம்

நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க தீர்மானம்

-

பல பிராந்திய மொழிகளில் வெற்றிப் படங்களைக் கொடுத்து தன்னை மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக நிலைநிறுத்தி உள்ளது குளோபல் ஒன் ஸ்டுடியோஸ். அவர்கள் இப்போது நகைச்சுவை மேதை, நடிகர், பாடகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக்காக எடுக்க அவரது சகோதரர் ஜவஹரிடமிருந்து உரிமை பெற்றுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான கே. ராஜேஷ்வர் எழுதிய ‘JP: THE LEGEND OF CHANDRABABU’ நாவலின் உரிமையை தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.

சந்திரபாபு படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார். கதையை மேலும் மேம்படுத்த, பாடலாசிரியரும் எழுத்தாளருமான மதன் கார்க்கி கூடுதல் திரைக்கதை, வசனங்கள் மற்றும் வசீகரிக்கும் பாடல் வரிகளை எழுதுகிறார். இந்தக் கூட்டணி நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்.

இந்தப் படம் சந்திரபாபுவுக்கு மறக்க முடியாத அஞ்சலியாக இருக்கும் என குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் உறுதியாக நம்புகிறது.

ஜியோ ஸ்டுடியோஸின், துல்கர் சல்மான் நடித்த ‘ஹே சினாமிகா’ படம் மற்றும் ‘ராமன் தேடிய சீதை’, ‘சாருலதா’, ‘அலோன்’, உள்ளிட்ட திரைப்படங்களை குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு ‘கோலி சோடா- தி ரைசிங்’ வெப் தொடரையும் தயாரித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்துள்ள பணவீக்கம்

ஆஸ்திரேலிய பணவீக்கம் மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. பணவீக்க விகிதம் 2.8 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும்,...

பட்டியலிடப்பட்ட ஆஸ்திரேலியாவின் மலிவான பல்பொருள் அங்காடிகள்

நாட்டின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடிகளில், நுகர்வோருக்கு மிகவும் லாபகரமான பல்பொருள் அங்காடி பற்றிய ஒரு வெளிப்பாடு வெளியிடப்பட்டுள்ளது. Aldi, Woolworths, Coles மற்றும் IGA ஆகியவற்றிலிருந்து 14...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கங்காரு விபத்துக்கள்

தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்கள் கங்காருக்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கங்காருக்கள் சம்பந்தப்பட்ட கார் விபத்துக்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வறண்ட வானிலை காரணமாக, உணவு மற்றும்...

“எனக்கு உங்கள் உதவி தேவை” – புடினிடம் கூறும் டிரம்ப்

ஈரான்-இஸ்ரேல் மோதலில் உதவ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வாய்ப்பை நிராகரித்ததாக டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். அமெரிக்க ஜனாதிபதி புடினிடம் ஒரு தொலைபேசி அழைப்பின் போது, ​​"எனக்கு...