Newsஅடுத்த ஆண்டு பூமிக்கு திரும்புவார் சுனிதா வில்லியம்ஸ்

அடுத்த ஆண்டு பூமிக்கு திரும்புவார் சுனிதா வில்லியம்ஸ்

-

சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது.

2025 பெப்ரவரி மாதம் அவர் பூமி திரும்புவார் என கடந்த ஆகஸ்ட் மாதம் நாசா தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அவரது வருகை மேலும் தாமதமாகி உள்ளது.

நாசா விண்வெளி வீரர்கள் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலக்ஸெண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் ஸ்பேஸ் எக்ஸ் ட்ரோகன் குழு-9 மிஷனுக்கான விண்கலம் மூலம் பெப்ரவரியில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்தது.

இந்நிலையில், தற்போது அதன் புறப்பாடு மேலும் தாமதம் அடைந்துள்ளதாக தகவலை நாசாவின் விண்வெளி திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் உறுதி செய்துள்ளார்.

அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக அமைந்தது. விண்வெளி மையத்தில் சுமார் ஆறு மாத காலத்துக்கும் மேலாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் தான் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...