நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் பின்னர், விக்டோரியாவில் பொது போக்குவரத்து கட்டணங்கள் ஜனவரி 1ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என பிரதமர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜனவரி 1 முதல் விக்டோரியா பொது போக்குவரத்து நெட்வொர்க்கில் தினசரி கட்டண வரம்பு $ 11 ஆக நிர்ணயிக்கப்படும் என்று அரசாங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தற்போதைய $10.60 தினசரி வரம்பு 40 காசுகள் அதிகரிக்கும்.
வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் வரம்பு 40 காசுகள் அதிகரித்து இந்த எண்ணிக்கை $7.60 ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி சலுகை கட்டண வரம்பு $5.30ல் இருந்து $5.50 ஆகவும், வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களுக்கான சலுகை வரம்பு $3.60ல் இருந்து $3.80 ஆகவும் அதிகரிக்கும்.
கிறிஸ்மஸ் தினத்தன்று விக்டோரியாவில் அனைத்து பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் இலவசம் என்ற அறிவிப்பில், ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
எவ்வாறாயினும், பிராந்திய கட்டண வரம்பின் தற்போதைய பெறுமதியே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.