விக்டோரியா மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக, அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, காட்டுத் தீ காரணமாக Halls Gap பிரதேசம் மூடப்படுவதால், நாளொன்றுக்கு சுமார் 1.9 மில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்படும் என Grampians-இல் உள்ள சுற்றுலாத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது நிலவும் காட்டுத் தீ நிலைமை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் Grampians தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், பிராந்திய சுற்றுலாத்துறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பிரதேசத்தின் சுற்றுலா ஈர்ப்பு உச்சத்தில் இருக்கும் காலப்பகுதியில் இந்த காட்டுத் தீ நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிராந்திய சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Grampians – Wimmera – Malle சுற்றுலா தலைமை நிர்வாகி மார்க் ஸ்லீமன் குறிப்பிடுகையில், இந்த காலகட்டத்தில் Halls Gap பகுதி பொதுவாக பிஸியாக இருக்கும்.
பிராந்திய சுற்றுலாப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கத்தின் தலையீடு அவசியம் என்பது அவர் கருத்தாகும்.
கிறிஸ்மஸ் தினத்தன்று கிராமிய பகுதியில் காட்டுத் தீ பரவல் காரணமாக அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.