தெற்கு பிரேசிலில் உள்ள கிராமடோ நகரில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானத்தின் பைலட்டாக இருந்த பிரேசில் தொழிலதிபர் லூயிஸ் கிளாடியோ கலியாசி மற்றும் அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் விபத்தில் இறந்ததாக அவரது நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்ட சில நிமிடங்களில், விமானம் ஒரு கட்டிடம் மற்றும் ஒரு வீடு மற்றும் கடையின் புகைபோக்கி மீது மோதியது.
இந்த விபத்தில் கிராமடோவில் 17 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிரேசிலிய ஊடக அறிக்கைகளின்படி, 61 வயதான பிரேசிலிய தொழிலதிபர் லூயிஸ் கிளாடியோ கலியாசி தனது குடும்பத்துடன் சாவ் பாலோ மாநிலத்தின் ஜுண்டியாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார்.
மோசமான வானிலையில் இந்த விமானம் புறப்பட்டுச் சென்றதாக மாநில ஆளுநர் எட்வர்டோ லைட் தெரிவித்துள்ளார்.