விக்டோரியா மாநிலத்தில் உள்ள கிராமியன்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீயினால் கிராமிய பிரதேசத்தில் 55,000 ஹெக்டேயர் நிலம் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக இப்பகுதியில் கால்நடை வளங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றய தினம் தீயணைப்பு அணிகளுக்கு சவாலான நாளாக இருந்துள்ளது.
கிராமியன்ஸ் தேசிய பூங்காவில் தற்போது சுமார் 600 தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், விக்டோரியாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த 100 மாநிலங்களுக்கு இடையேயான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், வில்லுரா மற்றும் கிராமிய பிரதேசத்தைச் சுற்றியுள்ள சிறிய பகுதிகளில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.