Cinemaமீண்டும் இணையும் ‘சுந்தரபாண்டியன்’ படக் கூட்டணி

மீண்டும் இணையும் ‘சுந்தரபாண்டியன்’ படக் கூட்டணி

-

2012 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் சுந்தரபாண்டியன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பிரபாகரன் இயக்கியிருந்தார். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து சூரி, இனிகோ பிரபாகரன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் பிரபாகரன், கதிர்வேலன் காதல், சத்ரியன், கொம்பு வச்ச சிங்கமடா ஆகிய படங்களை இயக்கினார்.

அடுத்தது தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார் பிரபாகரன்.இந்த படம் இன்னும் வெளிவரவில்லை. அதே சமயம் இயக்குனர் பிரபாகரன், நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து கதை ஒன்றை சொல்லியதாகவும் அந்த கதை விஜய் சேதுபதிக்கு பிடித்துப் போக விஜய் சேதுபதி, பிரபாகரன் இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இனிவரும் நாட்களில் விஜய் சேதுபதி, பிரபாகரன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

மேலும் விஜய் சேதுபதி, காந்தி டாக்ஸ், ஏஸ், ட்ரெயின் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் இவர்தான் நடிப்பில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

விக்டோரியாவில் அதிகரித்து வரும் நீரில் மூழ்கும் குழந்தைகளின் எண்ணிக்கை

விக்டோரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கோபன்னாவில் 11 வயது குழந்தை நேற்று காலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது. நேற்று காலை 11.20 மணியளவில் இந்த விபத்து...

வரலாற்றில் முதல் முறையாக குறைந்துள்ள Tesla-வின் ஆண்டு விற்பனை

வரலாற்றில் முதன்முறையாக Tesla நிறுவனம் தனது வருடாந்த விற்பனை வீழ்ச்சியை 2ம் திகதி பதிவு செய்துள்ளது. அதிகரித்த போட்டி மற்றும் EVகளுக்கான மந்தமான தேவை காரணமாக விற்பனை...

ஜனவரியில் விக்டோரியாவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள்

ஜனவரியில் விக்டோரியாவில் தவறவிடக்கூடாத இடங்கள் குறித்த அறிக்கையை timeout சமர்ப்பித்துள்ளார். இவற்றில் விக்டோரியாவில் வாழும் பலர் கூட இதுவரை சென்றிராத இடங்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. விக்டோரியாவில் கடற்கரையிலிருந்து தேசிய...

சீனாவை உலுக்கும் புதிய வைரஸ்

சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் பரவி உலக நாடுகளை புரட்டிப்போட்டது. இந்நிலையில், சீனாவில் HMPV...

சீனாவை உலுக்கும் புதிய வைரஸ்

சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் பரவி உலக நாடுகளை புரட்டிப்போட்டது. இந்நிலையில், சீனாவில் HMPV...

கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சிறியரக விமானம் 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். அதன்படி, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வணிக கட்டிடத்தில் சிறிய...