Newsஆப்கானிஸ்தான் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை

ஆப்கானிஸ்தான் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை

-

ஆப்கானிஸ்தானில் 2021 ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

பெண்கள் ஆரம்ப கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில் பெண்கள் பொது இடங்களில் பாடுவதற்கும், கவிதைகள் வாசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது தலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் பெண்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சமையல் அறைகளில் , முற்றங்களில் வேலை செய்யும் பெண்களை பார்ப்பது ஆபாசமான செயல்களுக்கு வழி வகுக்கும் என அந்நாட்டு அரசின் செய்தி தொடர்பாளர் ஜபி ஹில்சா முசாஹித் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உள்ள வீடுகளில் ஜன்னல்கள் இருந்தால் அதனை மறைக்கும் விதத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும், புதிய கட்டிடங்களில் ஜன்னல்கள் இருக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்டை வீட்டாரிடம் இருந்து தொல்லையை தவிர்க்க சுவர் கட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிதாக கட்டப்படும் கட்டுமான தளங்களை பார்வையிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...