விக்டோரியாவில் 74000 ஹெக்டேர் பரப்பளவில் வேகமாக பரவிய காட்டுத்தீ காரணமாக பல வன விலங்குகள் நகரங்களுக்கு வந்துள்ளன.
காட்டுத் தீயினால் ஆதரவற்ற விலங்குகளுக்கு தங்குமிடங்களை வழங்க வனவிலங்கு பாதுகாவலர்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வனவிலங்கு அதிகாரி ஒருவர் தனது வீட்டில் 20 கங்காருக்களை கொண்டு வந்து பத்திரமாக வைத்திருந்தார்.
முடிந்தால் அனைத்து ஆதரவற்ற விலங்குகளையும் வீட்டிற்குள் அழைத்துச் செல்ல விரும்புவதாக இந்த அதிகாரி குறிப்பிட்டார், ஆனால் அது நடைமுறையில் சாத்தியமற்றது.
காட்டுத் தீ காரணமாக ஏராளமான விலங்குகள் இறந்துள்ளன, அவற்றின் எண்ணிக்கை இன்னும் மதிப்பிடப்படவில்லை.
குறிப்பாக மரங்களில் வாழும் விலங்குகள் அதிகளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுத் தீயினால் அதிகளவான விலங்குகள் வீதிகளுக்கு வந்துள்ளதால், குறித்த வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





