Newsடிரம்பின் ஹோட்டல் முன் வெடித்த Musk-இன் கார்

டிரம்பின் ஹோட்டல் முன் வெடித்த Musk-இன் கார்

-

அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் உள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான ஹோட்டலுக்கு வெளியே எரிபொருள் கேனிஸ்டர்கள் மற்றும் பட்டாசு மோட்டார்கள் நிரப்பப்பட்ட டெஸ்லா சைபர் டிரக் வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் சாரதி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த அனைவரும் இளைஞர்கள் ஆவர்.

இந்த டிரக் கொலராடோவில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டு, வெடிவிபத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக நகருக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

டிரம்பின் ஹோட்டலுக்கு முன்பாக கண்ணாடி கதவு அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் புகைபிடிக்க ஆரம்பித்து பின்னர் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ஜோ பிடன், புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றின் முன் இடம்பெற்ற எலோன் மஸ்க்கின் கார் வெடித்த சம்பவம் தொடர்பில் வெள்ளை மாளிகை அவதானம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

Latest news

217 டிசைனர் கைப்பைகள்; 75 ஆடம்பர கைக்கடிகாரங்கள் வைத்துள்ள தாய்லாந்து பிரதமர்

தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு (Paetongtarn Shinawatra) 13.8 பில்லியன் பாட் (அமெரிக்க டொலரில் 400 மில்லியன்) சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாய்லாந்தின் தேசிய ஊழல் தடுப்பு...

இன்று முதல் விக்டோரியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 40C ஐ தாண்டும்

இந்த வாரம் விக்டோரியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Melbourne, Ballarat, Moe, Mallacoota, Omeo, Shepparton, Traralgon, Wangaratta, Albury-Wodonga மற்றும்...

விக்டோரியாவில் காணாமல் போயுள்ள Barbie பொம்மைகளின் அரிய தொகுப்பு

விக்டோரியாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து Barbie பொம்மைகளின் அரிய தொகுப்பு திருடப்பட்டுள்ளது. சுமார் 150 பொம்மைகளின் தொகுப்பு திருடப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மதிப்பு சுமார் $15,000 எனவும்...

15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மாநிலத்தில் அதிகரித்து வரும் நெடுஞ்சாலை விபத்துக்கள்

குயின்ஸ்லாந்தில் உள்ள புரூஸ் நெடுஞ்சாலையில் நேற்று இரவு இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 11 வயது குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில்...

மெல்பேர்ண் விமான நிலையத்தில் விபத்து குறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை

மெல்பேர்ண் விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த Etihad Airways விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது விமானத்தில் சுமார் 300 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள்...

15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மாநிலத்தில் அதிகரித்து வரும் நெடுஞ்சாலை விபத்துக்கள்

குயின்ஸ்லாந்தில் உள்ள புரூஸ் நெடுஞ்சாலையில் நேற்று இரவு இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 11 வயது குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில்...