Newsதடையை மீறி இலங்கைக்குள் நுழையும் கப்பல் - தீவிர அவதானத்தில் இந்தியா

தடையை மீறி இலங்கைக்குள் நுழையும் கப்பல் – தீவிர அவதானத்தில் இந்தியா

-

சீனாவின் அதி தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் தொடர்ந்தும் இலங்கை நோக்கி பயணித்து வருகின்றது.
வேகத்தை அதிகரித்துக்கொண்டு ஹம்பாந்தோட்டை நோக்கி அந்தக் கப்பல் பயணித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி நாளைய தினத்தில் இது ஹம்பாந்தோட்டையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கப்பலின் வருகையை தாமதப்படுத்தமாறு இலங்கை அதிகாரிகள் சீனாவுக்கு அறிவித்துள்ள போதும், அதனையும் கடந்து கப்பல் வேகமாக இலங்கை நோக்கி பயணிக்கின்றது.

செய்மதிகள் மற்றும் ஏவுகணைகளை கண்காணிக்க முடியுமான வசதிகள் கொண்ட சீனாவின் Yuan Wang 5 கப்பல் இன்று பிற்பகல் இலங்கையில் இருந்து 680 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்தது. மணித்தியாலத்திற்கு 14 கடல் மைல் வேகத்தில் அந்நேரத்தில் கப்பல் பயணித்துக்கொண்டிருந்தது. இதற்கு முன்னர் இந்த கப்பல் மணித்தியாலத்திற்கு 10 முதல் 13 கடல் மைல் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது.

தமது பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவித்து சீனாவின் இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பயணிப்பதை இந்தியா கடுமையாக எதிர்த்ததுடன் இந்த கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு நேற்று வௌிவிவகார அமைச்சு சீனாவிற்கு அறிவித்திருந்தது.

எனினும் அந்தக் கப்பல் குறித்த தினத்தில் இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கைதிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலிய கைதிகளின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. புள்ளியியல் பணியகத்தின் சமீபத்திய அறிக்கைகளின்படி, ஜூன் 30 வரையிலான 12 மாதங்களில் கைதிகளின் எண்ணிக்கை 41929 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி,...

குயின்ஸ்லாந்தில் ஜாமீன் நிபந்தனைகளை மீறும் இளைஞர் குற்றவாளிகள்

குயின்ஸ்லாந்தில் ஜாமீன் நிபந்தனைகளை மீறும் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் 8,464 பிணை மீறல்களுக்காக 1,144 இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பதில்...

ஆஸ்திரேலியர்களின் வாய் ஆரோக்கியம் குறித்து வெளியான தகவல்

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் உடல்நலப் பாதுகாப்பைத் தவிர்க்கிறார்கள், புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Finder இன் ஆய்வின்படி, கடந்த 12 மாதங்களில் ஐந்து ஆஸ்திரேலியர்களில் இருவர் மருத்துவ...

இன்ஸ்டகிராம் பதிவால் சுட்டுக் கொல்லப்பட்ட அழகி

ஈகுவடாரில் அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. லாண்டி பராகா கோய்புரா என்ற 23 வயது இளம்பெண், 2022யில் மிஸ் ஈகுவடார் போட்டியில் பங்கேற்று...

ஆஸ்திரேலியர்களின் வாய் ஆரோக்கியம் குறித்து வெளியான தகவல்

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் உடல்நலப் பாதுகாப்பைத் தவிர்க்கிறார்கள், புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Finder இன் ஆய்வின்படி, கடந்த 12 மாதங்களில் ஐந்து ஆஸ்திரேலியர்களில் இருவர் மருத்துவ...

தாய்லாந்தில் திறந்து வைக்கப்பட்ட தாய்லாந்து தமிழ் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட ‘ நடுகல் ‘

தாய்லாந்து நாட்டின், காஞ்சனபுரியில் தாய்லாந்து தமிழ் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட ' நடுகல் ' திறப்பு விழாவில், தமிழ் நாடு அரசின் போக்குவரத்து துறை அமைச்சர்...