சிட்னியின் மேன்லியைச் சேர்ந்த ஒருவர் Lotto டிராவில் பெரும் பரிசை வென்றுள்ளார்.
அவர் வென்ற பரிசுத் தொகையின் மதிப்பு 2.1 மில்லியன் டாலர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 4ஆம் திகதி இடம்பெற்ற Lotto குலுக்கல் போட்டியில் அவர் இந்தப் பரிசுத் தொகையை வென்றுள்ளமையும் விசேட அம்சமாகும்.
The Lott-இல் ஒரு அதிகாரி தெரிவிக்கும் வரை அந்த நபருக்கு அவர் பரிசு வென்றது தெரியாது.
வெற்றி பெறும் பரிசுத் தொகையில் தனது முதல் வீட்டை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், 21.42 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்றவர்கள் இன்னும் முன்வரவில்லை என்று கடந்த வாரம் The Lott வெளிப்படுத்தியது.