Newsவடகொரியாவில் மீண்டும் ஏவுகணைப் பரிசோதனை

வடகொரியாவில் மீண்டும் ஏவுகணைப் பரிசோதனை

-

ஐ.நா. சபையின் தடையை மீறி வட கொரியா மீண்டும் ஓா் ஏவுகணையை வீசிப் பரிசோதனை நடத்தியுள்ளது. குறித்த ஏவுகணைப் பரிசோதனையானது கடந்த 6ம் திகதி இடம் பெற்றுள்ளது.

இது குறித்துத் தென் கொரிய முப்படைகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலிஸ்டிக் வகையைச் சோ்ந்த அந்த ஏவுகணை 1,100 கி.மீ. தொலைவுக்குப் பாய்ந்து சென்று கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடற்பகுதியில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களின் பிரத்தியோகப் பொருளாதார மண்டலத்துக்கு அருகே அந்த ஏவுகணை விழுந்தாலும், அதனால் தங்களின் கப்பல்களுக்கோ, விமானங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் அன்டனி பிளிங்கன் தென் கொரியாவுக்கு வந்து சென்றதைக் கண்டித்து இந்த ஏவுகணைப் பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியர்களுக்கு McDonald’s அறிமுகப்படுத்தியுள்ள புதிய Menu

ஆஸ்திரேலியர்களுக்கு சில புதிய உணவு மற்றும் பானங்களை அறிமுகப்படுத்த McDonald’s நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அவுஸ்திரேலியர்களுக்கு McOz Burger-ஐ அறிமுகப்படுத்த அந்நிறுவனம்...

சமூக ஊடகங்களுக்கான மற்றொரு சேவையை நிறுத்தும் Meta

Meta நிறுவனம் தனது சமூக ஊடக வலையமைப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட Fact – Checking திட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில், Meta நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி...

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – வீடுகளை இழந்துள்ள 30,000 பேர்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் தொடங்கிய பாரிய காட்டுத் தீ, தெற்கு கலிபோர்னியா முழுவதும் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுமார்...

காட்டுத்தீக்குப் பிறகு திறக்கப்பட்ட Grampians தேசிய பூங்கா

சுமார் 80,000 ஹெக்டேர்களை அழித்த விக்டோரியா காட்டுத்தீக்குப் பிறகு Grampians தேசிய பூங்கா சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மீண்டும் இங்கு வர வேண்டும்...

காட்டுத்தீக்குப் பிறகு திறக்கப்பட்ட Grampians தேசிய பூங்கா

சுமார் 80,000 ஹெக்டேர்களை அழித்த விக்டோரியா காட்டுத்தீக்குப் பிறகு Grampians தேசிய பூங்கா சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மீண்டும் இங்கு வர வேண்டும்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள பணவீக்கம் – சமீபத்திய அறிக்கை

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மாதாந்திர பணவீக்க விகிதம் நவம்பரில் 2.3 சதவீதமாக சற்று உயர்ந்துள்ளது. இலங்கையின் பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதம் 2.1 வீத...