சுமார் 80,000 ஹெக்டேர்களை அழித்த விக்டோரியா காட்டுத்தீக்குப் பிறகு Grampians தேசிய பூங்கா சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் மீண்டும் இங்கு வர வேண்டும் என Grampians பூங்கா நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, வெள்ளிக்கிழமை காலை முதல் MacKenzies Falls, Venus Baths மற்றும் Boroka Lookout ஆகியவை திறந்திருக்கும்.
பிரபலமான சுற்றுலா நகரமான Halls Gap-இல் ஏற்பட்ட காட்டுத்தீயினால் Grampians தேசியப் பூங்காவை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிறகு 18 நாட்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்படுகிறது.
Grampians-இல் கடந்த வருடம் இரண்டு தீ நிலைமைகள் ஏற்பட்டதாகவும் அதன் வருமானம் கூட 25 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா பயணிகளுக்கு தற்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், தீயணைப்பு வீரர்கள் பூங்காவை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் Vic Emergency Service தெரிவித்துள்ளது.