Newsலாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ - வீடுகளை இழந்துள்ள 30,000 பேர்

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – வீடுகளை இழந்துள்ள 30,000 பேர்

-

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் தொடங்கிய பாரிய காட்டுத் தீ, தெற்கு கலிபோர்னியா முழுவதும் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 20 ஏக்கர் சிறிய நிலப்பரப்பில் தொடங்கிய காட்டுத் தீ, சில மணி நேரங்களில் 1,200 ஏக்கருக்குப் பரவி, அப்பகுதியில் உள்ள 10,000 வீடுகள் மற்றும் 13,000 கட்டிடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறையின் தலைவர் கிறிஸ்டின் குரோலியின் கூற்றுப்படி,
தீயைக் கட்டுப்படுத்த 250 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

பாதுகாப்பு நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து 30,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிலைமை மேலும் மோசமடையலாம் என வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பலத்த காற்று வீசியதால் தீயில் இருந்து எறியப்படும் தீப்பொறிகள் பல மைல்களுக்கு பயணித்து புதிய தீ பரவும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதுடன், அவசரநிலை ஏற்பட்டால் அப்பகுதியை விட்டு வெளியேற தயாராக இருக்குமாறு பிரதேசவாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்கனவே அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...