Newsஜஸ்டின் ட்ரூடோவை பெண் என விமர்சித்த எலான் மஸ்க்

ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என விமர்சித்த எலான் மஸ்க்

-

கனடாவின் இடைக்கால பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என்று குறிப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கும் யோசனையை டொனால்ட் டிரம்ப் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.

“நான் ஜனாதிபதியாகிய பின் அமெரிக்காவின் மானியங்கள் உள்ளிட்ட உதவிகள் கனடாவுக்கு கிடைக்காது என்பதை அறிந்தே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியுள்ளார் “ – என டிரம்ப் கருத்து தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாகக் கனடாவை இணைப்பதற்குத் தனது ஆட்சியில் அந்நாட்டிற்கு பொருளாதார ரீதியில் அழுத்தம் தரப்படும் என்று டிரம்ப் கூறினார்.

இதனைக் கனடாவின் இடைக்கால பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டித்தார்.”கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது ஒருபோதும் நடக்காது” – என்று கூறியிருந்தார் ட்ரூடோ. மேலும், கனடா அரசியல்வாதிகளும் சமூக ஊடகங்களில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இதையடுத்து, கனடாவின் இடைக்கால பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என்று குறிப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். ட்ரூடோ இராஜினாமா செய்ததைச் சுட்டிக்காட்டும் வகையில், மீண்டும் ட்ரூடோவை கேலி செய்துள்ள எலான் மஸ்க்,” ஏய் பெண்ணே, நீ இப்போது கனடாவின் ஆளுநர் அல்ல, நீ என்ன சொன்னாலும், அதற்கு இப்போது மதிப்பில்லை “ என்று விமர்சித்துள்ளார். எனவே அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...