லாஸ் ஏஞ்சல்ஸைப் பாதித்துள்ள கடுமையான மற்றும் பேரழிவுகரமான காட்டுத்தீக்கு மத்தியில் அமெரிக்காவுக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த உதவத் தயாராக இருப்பதாக அவசர மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஜென்னி மெக்அலிஸ்டர் தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பில் அமெரிக்கா எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்றாலும், எந்த நேரத்திலும் இராஜதந்திர உதவிகளை வழங்க ஆஸ்திரேலியா தயாராக இருப்பதாக செனட்டர் மெக்அலிஸ்டர் கூறினார்.
அமெரிக்காவிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை, அமெரிக்காவில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு உதவ நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் அது தொடர்பான கோரிக்கையை நாங்கள் பெற்றால், எங்களால் முடிந்த அனைத்தையும் பொறுப்புடன் செய்வோம் என்று மெக்அலிஸ்டர் கூறியுள்ளார் .