ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் அடுத்த வாரம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சிட்னியில் நாளை காற்றுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அடுத்த திங்கட்கிழமை வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நாளையும் நாளை மறுதினமும் மெல்பேர்ன் மற்றும் பிரிஸ்பேனில் மழையுடன் கூடிய காலநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோல்ட் கோஸ்ட் மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகளில் 100mm இற்கும் அதிகமான மழை எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் வார இறுதியில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.