Newsகோட்டாபய நிரந்தர தஞ்சம் குறித்து தாய்லாந்து வெளியிட்ட தகவல்

கோட்டாபய நிரந்தர தஞ்சம் குறித்து தாய்லாந்து வெளியிட்ட தகவல்

-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் Prayut Chan-o-cha அறிவித்துள்ளார்.

இதேவேளை, சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தாய்லாந்து செல்லவுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாய்லாந்து அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் ஏழு தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக கடும் போராட்டங்கள் வெடித்ததுடன் கடந்த ஜூலை 9 ஆம் திகதி போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி இதனை அடுத்து 2 நாட்களில் மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

வாகனப் பராமரிப்பைத் தவிர்க்கும் பெரும்பாலான ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள்

தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக, 4ல் 1 ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள் தங்களது வாகன பராமரிப்பு சேவைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. ஃபைண்டரின் புதிய ஆய்வில்,...

மேலும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பான சந்தேகநபர்

விக்டோரியா மாகாணத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் காணாமல் போன சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர் மீது...

வாகனம் ஓட்ட மிகவும் ஆபத்தான நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியா

வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான வளர்ந்த நாடுகளின் தரவரிசைப்படி, ஆஸ்திரேலியா 18வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச சாலை பாதுகாப்பு தரப்படுத்தல் அறிக்கையை...

ஆஸ்திரேலியர்கள் குறைவாக உண்ணும் உணவுகள் குறித்து வெளியான புதிய அறிக்கை

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு , ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை குறைவாக உட்கொள்ளும் உணவுகள் என்று கண்டறிந்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த...

“மேதகு” இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்

மேதகு மற்றும் இராக்கதன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரவீன் குமார் நேற்று 2ம் திகதி காலமானார். அவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டு தமிழீழ...

ஆஸ்திரேலியாவில் பணக்காரராக இருக்க உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை?

சராசரி ஆஸ்திரேலியர் பணக்காரர் ஆவதற்கு சுமார் $346,000 சம்பாதிக்க வேண்டும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, ஒரு நபரின் சராசரி வருமானம்...