சர்வதேச மாணவர் சமூகம் விக்டோரியாவில் உள்ள பள்ளி அமைப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
மாநில பள்ளிக்கல்வித்துறையில் இருக்கும் தரம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 170,000 மாணவர்கள் கல்விக்காக மாநிலத்திற்கு வருவதாக விக்டோரியா மாநில இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், விக்டோரியா கல்விச் சான்றிதழ் (VCE) உலகளவில் சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
விக்டோரியா மாநிலத்தில் இயங்கி வரும் மொழி மையங்கள் செயல்படுவதால் மாணவர்களின் ஆங்கில அறிவை மிக சிறப்பாக வளர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
மெல்பேர்ன் நகரின் பல்கலாச்சார பின்னணி சர்வதேச மாணவர்களை விக்டோரியா மாநிலத்திற்கு ஈர்ப்பதில் முக்கிய காரணியாக மாறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.