தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பரில் நாட்டில் இராணுவச் சட்டத்தை விதித்து கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென் கொரிய ஊழல் தடுப்பு அமைப்பினால் இந்த கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மாத தொடக்கத்தில் அவரை கைது செய்வதற்கான முதல் முயற்சி தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.
14ம் திகதி ஜனாதிபதி யூன் சுக் யோலை பதவியில் இருந்து நீக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அழைக்கப்பட்டு, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
யூன் சுக் இயோல் தனது பதவிக் காலத்தில் கைது செய்யப்பட்ட முதல் தென் கொரிய அதிபராகக் கருதப்படுகிறார்.