நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை மற்றும் சூறாவளி காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மின்சாரம் இன்றி 143000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று CBDயின் 100 கிலோமீற்றர் எல்லைக்குள் 73,700 மின்னல் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
மேலும் சிட்னியில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இன்று பிற்பகல் அப்பகுதியில் கனமழை, திடீர் வெள்ளம், ஆலங்கட்டி மழை மற்றும் சேதப்படுத்தும் காற்று தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இன்றைய தினம் கடல் தொடர்பான நடவடிக்கைகளில் கவனமாக இருக்குமாறு மக்களுக்கு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.