Newsகூட்டாட்சி தேர்தலுக்கு முன்னதாக ஆஸ்திரேலியா அமைச்சரவையில் மாற்றம்

கூட்டாட்சி தேர்தலுக்கு முன்னதாக ஆஸ்திரேலியா அமைச்சரவையில் மாற்றம்

-

அடுத்த கூட்டாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, தனது அமைச்சரவையில் சில சிறப்பு மாற்றங்களைச் செய்யவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.

NDIS அமைச்சர் மற்றும் பொது சேவை அமைச்சராக பதவி வகித்த பில் ஷார்ட்டன் அடுத்த வாரம் மத்திய பாராளுமன்றத்தில் இருந்து விலகுவார் என்ற அறிவிப்பை தொடர்ந்து இது வெளியாகியுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்வின் பின்னர் இந்த மாற்றங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தற்போது சமூக சேவைகள் அமைச்சராக பதவி வகிக்கும் அமண்டா ரிஷ்வொர்த்துக்கு NIDS அமைச்சர் பதவியும் வழங்கப்படவுள்ளது.

தற்போது நிதியமைச்சராக கடமையாற்றி வரும் Katy Gallagher-இற்கு எதிர்காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பும் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, தேசிய ஊனமுற்றோர் காப்புறுதித் திட்டத்திற்கு ஆதரவளிக்கும்
பொறுப்பு இளைஞர் அமைச்சர் (Youth Minister) Anne Aly-இற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

இந்த அமைச்சர்கள் தற்போது வகிக்கும் அமைச்சுக்களுக்கு மேலதிகமாக புதிய பதவிகளில் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

NSW-வில் சாலை விபத்துகளைக் குறைக்க ஒரு புதிய வழி

குறைந்த தெரிவுநிலை கொண்ட சாலைகளில் ஓட்டுநர் பாதுகாப்பை அதிகரிக்கவும், சாலை அடையாளங்களை அதிகமாகத் தெரியும்படி செய்யவும் ஒரு புதிய பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பகலில் சூரிய ஒளியை உறிஞ்சி...

அதிகரித்து வரும் சிகரெட் விலைகள் – சரிந்து வரும் சட்டப்பூர்வ சிகரெட் வணிகங்கள்

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோத சிகரெட் வணிகங்கள் பெருகி வருவதால், சட்டப்பூர்வ சிகரெட் வணிகங்கள் சரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தான் பிரதானமானவை. மெந்தோல்...

குழந்தை துஷ்பிரயோகத்திற்கு YouTube கண்ணை மூடிக்கொண்டிருப்பதாக குற்றம்

உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் தளங்களில் வரும் ஆன்லைன் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை இன்னும் "கண்மூடித்தனமாக" வைத்திருப்பதாக ஆஸ்திரேலியாவின் இணைய கண்காணிப்பு...

நோய்வாய்ப்படும் அபாயத்தில் உள்ள பணியிடத் தொழிலாளர்கள்

செயற்கைக் கல் பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு ஆஸ்துமா ஏற்படும் அபாயம் அதிகம் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இதுபோன்ற சூழல்களில் பணிபுரியும் ஐந்து...

நோய்வாய்ப்படும் அபாயத்தில் உள்ள பணியிடத் தொழிலாளர்கள்

செயற்கைக் கல் பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு ஆஸ்துமா ஏற்படும் அபாயம் அதிகம் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இதுபோன்ற சூழல்களில் பணிபுரியும் ஐந்து...

தன்னார்வ நிர்வாகத்தில் நுழையும் மெல்பேர்ணின் பிரபலமான Hatted இத்தாலிய உணவகம்

மெல்பேர்ணில் உள்ள பிரபலமான இத்தாலிய உணவகமான 1800 Lasagne, கடுமையான நிதி சிக்கல்கள் காரணமாக தன்னார்வ நிர்வாகத்தில் நுழைந்துள்ளது. உணவகத்தை புதிய மாதிரியின்படி இயக்குவதற்கு இயக்குநர்கள் குழுவுடன்...