கிரெடிட் கார்டு கூடுதல் கட்டணங்களை (Credit Card Surcharge) தடை செய்வது குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள இரண்டு பெரிய விமான நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அதன்படி, கிரெடிட் கார்டு கூடுதல் கட்டணங்கள் (Credit Card Surcharge) தடை செய்யப்பட்டால், வாடிக்கையாளர்கள் எதிர்காலத்தில் விமானக் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று Qantas மற்றும் Virgin விமான நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
ரிசர்வ் வங்கியின் பரிந்துரை வரும் வரை இதை அமல்படுத்த தயாராக இருப்பதாக மத்திய அரசின் பொருளாளர் தெரிவித்துள்ளார். இந்த தடைக்கு Commonwealth வங்கியின் ஆதரவும் கிடைத்துள்ளது.
இருப்பினும், கார்டு செலுத்தும் முறைக்கு ஏற்படும் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட கூடுதல் கட்டணம் தேவை என்று Qantas நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த முறையானது வாடிக்கையாளர் சமூகத்திற்கு மலிவு விலையில் விமான கட்டணத்தை வழங்க உதவும் என்று Virgin மேலும் கூறியுள்ளது.