அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலியர்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதுவும் தேசிய கடன் உதவி எண் மூலம் வழங்கவுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிதிக்காக கூடுதலாக 44 மில்லியன் டாலர்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நிதி ஆலோசகர்களுக்கு பயிற்சி அளிக்க இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
நிதி ஆலோசனை தேவைப்படும் ஆஸ்திரேலியர்களுக்கு பல நிவாரணங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் சுமார் 20,000 அவுஸ்திரேலியர்கள் பயனடைவார்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.