ஆஸ்திரேலியா தினத்தன்று (Australia Day), மெல்பேர்ண் குடியிருப்பாளர்கள் இலவசமாக பங்கேற்கக்கூடிய சிறப்பு நிகழ்வுகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இது விக்டோரியா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 26 ஆம் திகதி மெல்பேர்ண் நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ள “Australia Day Flag Raising Ceremony” இல் மெல்பேர்ண் குடியிருப்பாளர்கள் பங்கேற்கலாம்.
அன்றைய தினம் காலை 10.00 மணி முதல் Federation Squareல் நடைபெறும் Australia Day கொண்டாட்டங்களில் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசையைக் கேட்டுக்கொண்டே சுவையான உணவு மற்றும் பானங்களை அனுபவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், குடிமக்கள் ஆஸ்திரேலியா தினத்தன்று “Government House Open Day” இலவசமாக சேரலாம்.
அன்றைய தினம் “21 – Gun Salute at the Shrine of Rememberance” நிகழ்வில் எவ்வித கட்டணமும் இன்றி பங்குபற்றும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.